கர்நாடக மாநிலத்தில் 1 முதல் 5 வரை பள்ளிகள் திறப்பது முடிவாகவில்லை: கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தகவல்

பெங்களூரு: மாநிலத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர் 17ம் தேதி முதல் டிகிரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் இயங்க தொடங்கியுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு, இரண்டாமாண்டு பியூசி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வித்யகாமா திட்டத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

முதலாமாண்டு பியூசி கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளதுடன் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில், ெபங்களூருவில் தொடங்கியுள்ள ‘‘சிறுவர் நடை பள்ளியை நோக்கி’’ என்ற விழிப்புணர்வு அமைப்பு, கொரோனா தொற்று வீரியம் குறைந்துள்ளதால், வழக்கமாக பள்ளிகள் திறக்க வேண்டும். தற்போது வித்யகாம திட்டத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்காமல் தவிர்க்கப்பட்டு, அதற்கு பதிலாக உணவுதானியம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பான்மையான மாணவர்களுக்கு உணவு தானியம் கிடைக்கவில்லை. அப்படி வாங்கி சென்றாலும் மாணவர்களின் பெற்றோர் கூலி வேலை செய்பவர்களாக இருப்பதால், பிள்ளைகளுக்கு சமைத்து கொடுக்க முடியவில்லை என்று விழிப்புணர்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மாநில கல்வியமைச்சருக்கு விழிப்புணர்வு அமைப்பு கொடுத்துள்ள மனுவில் ஜனவரி 23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வேண்டும். மாணவர்களுக்கு பாடம் நடத்துவதுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மதிய உணவு வழங்க வேண்டும். கடந்த 9 மாதங்களாக பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு தடை செய்யப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் வாழும்பெரும்பான்மையான மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் தவித்து வருகிறார்கள்.

இந்த குறை நீங்க வேண்டுமானால் ஜனவரி 23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வேண்டும். இல்லையெனில் வரும் 25ம் தேதி மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஜனவரி 23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வேண்டும். மாணவர்களுக்கு பாடம்  நடத்துவதுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மதிய உணவு வழங்க வேண்டும் அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் துறைகள் ஒதுக்கீட்டில் எந்த பிரச்னையும் கிடையாது.  அமைச்சர் எம்டிபி நாகராஜ் கலால் துறை எனக்கு விரும்பம் இல்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து பிறகு பரிசீலனை செய்யப்படும்

Related Stories:

>