தங்கவயல் தாலுகா கிராம பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு: கலெக்டர் சத்தியபாமா அறிவிப்பு

தங்கவயல்: தங்கவயல் தாலுகாவை சேர்ந்த கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில் தங்கவயல் தாலுகாவை சேர்ந்த 16 கிராமபஞ்சாயத்துகளுக்கான தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான ஜாதி இட ஒதுக்கீடு குறித்த விவரத்தை கோலார் மாவட்ட கலெக்டர் சத்தியபாமா நேற்று தங்கவயலில் அறிவித்தார்.

அதன் விவரம் வருமாறு.

1.சுந்தர பாளையா பஞ்சாயத்து, தலைவர் பொது பிரிவு துணை தலைவர்,பொது பிரிவு பெண்.

2.என்.ஜி.உல்கூர் பஞ்சாயத்து, தலைவர் பொது பிரிவு துணை தலைவர் எஸ்.சி.பெண்.

3.கட்டகாமதேனள்ளி பஞ்சாயத்து தலைவர், பொது பிரிவு, துணை தலைவர்.எஸ்.சி.பெண்.

4. சக்ராசகுப்பா பஞ்சாயத்து தலைவர், பொது பிரிவு, துணை தலைவர் எஸ்.சி.பெண்.

5. கட்டமாதமங்கலா பஞ்சாயத்து தலைவர், பொது பிரிவு, துணை தலைவர் எஸ்.சி. பெண்

6 ராமசாகரா.பஞ்சாயத்து. தலைவர் பொது பிரிவு பெண், துணை தலைவர் எஸ்.சி.பெண்.

7. பேத்தமங்கலா.பஞ்சாயத்து.தலைவர் பொது பெண்.துணை தலைவர்.எஸ்.சி.

8 பாரண்டள்ளி.பஞ்சாயத்து.தலைவர்.பொது பெண்.துணை தலைவர்.எஸ்.சி.

9. வெங்கசந்திரா.பஞ்சாயத்து.தலைவர்.எஸ்.சி.துணை தலைவர்.பொது பெண்.

10. காமசமுத்திரா.பஞ்சாயத்து.தலைவர்.எஸ்.சி.துணை தலைவர் பொது.

11. சீனிவாசந்திரா.பஞ்சாயத்து.தலைவர்.எஸ்.சி.துணை தலைவர் பொது பெண்.

12 .உல்கூரு.பஞ்சாயத்து.தலைவர்.எஸ்.சி.பெண்.துணை தலைவர்.பொது

13. கங்கான்டனள்ளி,பஞ்சாயத்து,தலைவர்.எஸ்.சி.பெண்.துணை தலைவர்.பொது.

14.கேசம்பள்ளி.பஞ்சாயத்து.தலைவர்.எஸ்.சி.பெண்.துணை தலைவர்.எஸ்.சி.

15. மாரிகுப்பா பஞ்சாயத்து தலைவர். எஸ்.சி. பெண். துணை தலைவர்.பொது.

16. கொல்லள்ளி.பஞ்சாயத்து.தலைவர் .எஸ்.சி.பெண்.துணை தலைவர்.பொது.

போக்குவரத்துக்கு தடை

சமீபத்தில் நடந்த தங்கவயல் தாலுகா பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான ஜாதி வாரியான இட ஒதுக்கீடுகளை அறிவிக்க, ஆண்டர்சன்பேட்டை லட்சுமி திரையரங்கில் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான கூட்டம்  நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒதுக்கீடுகளை அறிவிக்க கோலார் மாவட்ட கலெக்டர் சத்தியபாமா வந்தார்.

இதன் எதிரொலியாக காலை முதலே போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆண்டர்சன்பேட்டை பஸ் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து லட்சுமி திரையரங்கம் வழியாக கில்பர்ட்ஸ், மாரி குப்பம் செல்லும் ஓ டானியல் சாலை ஆகியவற்றை பேரி கேடர்களை வைத்து மறித்து வாகன போக்குவரத்து தடை செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் ஆண்டர்சன்பேட்டை மார்க்கெட் பகுதிகளில் உள்ள குறுகலான  தெருக்களில் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். ஜாதி வாரியான ஒதுக்கீடுக்கான அறிவிப்பு கூட்டத்திற்கு பஞ்சாயத்து உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories:

>