×

அரசு மருத்துவமனை டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பெண்கள் கைது

மைசூரு: அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவரை பணம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்கள், மனித உரிமை அமைப்பை சேர்ந்த
மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர். மைசூரு மாவட்டம் மண்டியா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கே.ஆர்.மருத்துவமனையில் ராஜேஷ் என்பவர் மருத்துவராக பணி புரிந்து வருகிறார். இவரை செல்போனில் தொடர்பு கொண்ட சில பெண்கள் பத்திரிகையாளர்கள், மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர். பின்னர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பணம் வாங்கும் வீடியோ கிளிப் எங்களிடம் உள்ளது. இதை தொலைகாட்சிகளில் வெளியிடுவதாக தெரிவித்தனர்.

அதேபோல், ரூ. 5 லட்சம் பணம் கொடுத்தால் வீடியோ வெளியிடாமல் பார்த்துக்கொள்வதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் ரூ. 50 ஆயிரம் பணம் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் இவர்கள் ரூ. 1.50 லட்சம் பணம் கொடுக்கும்படி பேரம் பேசினர். இதனால் முன்பணமாக ரூ. 50 ஆயிரத்தை மருத்துவர் கொடுத்துள்ளார். ஆனால் மீதமுள்ள பணத்தை கொடுக்கவில்லை. இதனால் மூன்று ெபண்களும் பணம் கேட்டு மிரட்டல்

விடுத்து வந்தனர்.

இதில் மனரீதியாக பாதிக்கப்பட்ட மருத்துவர் இது குறித்து மண்டியா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் மூன்று பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அம்ரீன், ஆயிஷாபாய், ஷகினாநவீத் என்றும் இவர்களிடம் இருந்த அடையாள அட்டைகள் போலி என்று தெரியவந்தது. இதனால் அவர்களை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிகிச்சை அளிக்க பணம் வாங்கும் வீடியோ கிளிப் எங்களிடம் உள்ளது. இதை தொலை காட்சிகளில் வெளியிடுவதாக தெரிவித்தனர்.

Tags : women ,government hospital doctor , Government Hospital 3 women arrested for extorting money from doctor
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது