×

தென்கிழக்கு டெல்லியில் துணிகரம் ஜூவல்லரியில் ரூ.20 கோடி நகைகள் கொள்ளை: கொரோனா கவச உடை அணிந்து கைவரிசை காட்டிய ஊழியர் சிக்கினார்

புதுடெல்லி: தென்கிழக்கு டெல்லியின் கல்காஜியில் உள்ள  ஜூவல்லரி ஷோரூமில் இருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் திருடுபோனது. போலீசார் துரிதகதியில் செயல்பட்டு சம்பவம் நடந்த அதேநாளில் குற்றவாளியை கைது செய்தனர். சக ஊழியர்களால் அவமானப்படுத்தால் பழிவாங்க நினைத்த கடையின் ஊழியரே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் கல்காஜி பகுதியில் ெசயல்பட்டு வரும் அஞ்சலி ஜூவல்லர்ஸ் என்கிற நகை கடையில் மர்ம நபர் புகுந்து அங்கிருந்த நகைளை கொள்ளையடித்து தப்பிச்சென்றான்.

இதுகுறித்த தகவல் அடுத்தநாள் காலையில் தெரியவந்ததை அடுத்து  மேலாளார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.20 கோடியாகும். கடையின் மேலாளர் அரிஜித் சக்கரவர்த்தி அளித்த புகாரின் பேரில் அருகாமையிலுள்ள காவல் நிலையங்களை சேர்ந்த போலீசாருடன் இணைந்து தனிப்படை அமைத்து விசாரணையை துவக்கினர். கடையின் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்மநபர் ஒருவர் கடையின் மேற்கூரை மீது ஏறி கடைக்குள் செல்வது பதிவாகியிருந்தது. எனினும், மர்ம நபரின் அடையாளம் உடனடிாக தெரியவில்லை.

இதையடுத்து, போலீசார் விசாரணையின் ஒருபகுதியாக கடையில் வேலை செய்த ஊழியர்களின் பட்டியலை சேகரித்தனர். அவர்களில் சம்பவம் நடந்த

நாளில் கடையில் இல்லாதவர்கள் பட்டியலையும் சந்தேகத்தின் பேரில் சேகரித்து ஆய்வு செய்தனர். அப்போது கடையில் எலக்ட்டீரிசியனாக வேலை பார்த்து வந்த ஷேக் நூர் ரகுமான் என்பவர் சொந்த கிராமத்தக்கு செல்ல விடுப்பில் சென்றது தெரியவந்தது. இவர் 10 நாள் விடுப்பு எடுத்து சென்று ஜனவரி 25ம் தேதி மீண்டும் பணிக்கு திரும்பி வருவதாக திட்டமிட்டு இருந்தது தெரிவந்தது. இதையடுத்து இதனை மோப்பம் பிடித்த போலீசார் ரகுமானின் சொந்த ஊருக்கு அவர் சென்றுள்ளரா என்பதை ஆய்வு செய்தனர். அப்போது அவர் அங்கு செல்லவில்லை என்பதை உறுதி செய்தனர்.

அதன்பின் ரகுமானின் சந்தேகம் வலுக்கவே அவரை பின்தொடர்ந்தனர். அதில் ரகுமான் கரோல்பாக் ஏரியாவில் இருப்பதை உறுதி செய்துகொண்டு அங்கு சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.23,000 ரொக்கம் பணம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இதுபற்றி துணை கமிஷனர் ஆர்பி மீனா கூறியதாவது:   கைது செய்யப்பட்ட ரகுமான் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். அங்குள்ள அஞ்சலி ஜூவல்லரி கடையில் வேலை பார்த்து வந்த பின்னர் கடந்த ஓராண்டுக்கு முன்பாக டெல்லி கல்காஜியில் உள்ள கிளைக்கு மாற்றலாகி வந்து எலக்ட்ரிசியனாக பணியாற்றி வந்துள்ளார்.

கடையில் உள்ள சக ஊழியர்கள் அவரை உதாசீனப்படுத்தி டீ போட வைப்பது, கடையை துடைப்பது, சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளை

வழங்கியுள்ளனர். இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் சக ஊழியர்களுக்கு பாடம் கற்பிக்க நினைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக

தெரிவித்தார். மேலும், கொள்ளை அடிக்கும் முன்பாக, அதற்காக பயன்படுத்தப்படும் கேஸ்கட்டர்கள், உள்ளிட்ட உபகரணங்களை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி யு-டியூப்பில் பார்த்து பயிற்சி எடுத்துள்ளார். அதன்பின் தேவையான கருவிகளை வாங்கியுள்ளார். ஜூவல்லரி கடைக்கு அருகிலுள்ள கட்டிடத்தில் உள்ள வீடுகள் காலியாக இருப்பதை உறுதி செய்துகொண்ட ரகுமான் அந்த கட்டிடத்தின் மீது ஏறி மூன்று கட்டிடங்களை தாண்டி வந்து கடையின் மீதுள்ள பிவிசி கூரையை பெயர்த்து உள்ளே நுழைந்துள்ளார்.

கீழ் தளத்தில் உள்ள நகைகளை சுருட்டிக்கொண்டு அவற்றை பையில போட்டு கட்டி அங்கிருந்து தப்பியுள்ளார். மேலும், அடையாளம் தெரியாமல்

இருப்பதற்காக சுகாதாரப்பணியாளர்கள் உடுத்தும் பிபிஇ கிட்டுகளை உடுத்திக்கொண்டு கொள்ளையில் இறங்கியுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட

நகைகளின் மதிப்பு ரூ.20 கோடியாகும். இகுறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு துணை கமிஷனரங கூறினார்.

* அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக சுகாதாரப்பணியாளர்கள் உடுத்தும் பிபிஇ கிட்டுகளை உடுத்திக்கொண்டு கொள்ளையில் இறங்கியுள்ளார்.
* கொள்ளைக்கு பயன்படுத்திய கருவிகளை பயன்படுத்துவது பற்றி யுடியூப் பார்த்து தெரிந்து கொண்டு கொள்ளையை அரங்கேற்றியுள்ளார்.

Tags : venture jewelery ,Delhi , Venture in Southeast Delhi Rs 20 crore jewelery looted from jewelery: Corona armored employee caught red-handed
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...