கோவிட்-19 தீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட ஜார்கண்ட் அமைச்சர் குணம் அடைந்தார்: எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை தகவல்

சென்னை: கொரோனா தீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட ஜார்கண்ட் அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ முழுமையாக குணமடைந்தார் என்று எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் சார்பாக, எம்ஜிஎம் ஹெல்த்கேர் இயக்குநர் டாக்டர் பிரஷாந்த் ராஜகோபாலன், அறுவை சிகிச்சை செய்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், இதயம்-நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மெக்கானிக்கல் சர்க்குலேட்டரி சப்போர்ட் நிறுவனத்தின் இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் ராவ், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, இன்ட்ரவென்ஷனல் பல்மனாலஜி நிபுணர் மற்றும் நெஞ்சக மருத்துவரும் க்ளினிக்கல் டைரக்டருமான டாக்டர் அபர் ஜிண்டால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கோவிட் காரணமாக பாதிக்கப்பட்ட நுரையீரலை மாற்றும் அறுவை சிகிச்சைகள் அதிகம் செய்து பழக்கம் இல்லாத நிலையில் இந்த கேஸ் மிகவும் சவாலான ஒன்றாக அமைந்திருந்தது. அமைச்சரின் நிலை மோசமாவதை தொடர்ந்து அவரது பாதுகாப்பு மற்றும் உடல்நலம் பெற்று மீண்டு வர சில முக்கிய முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டியிருந்தது. அதன் அடிப்படையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது பொருத்தப்பட்ட நுரையீரல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதில் அவர் உடல்நிலை நிலையாக இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றார். மேலும், ஹெல்த்கேரின் இதயம் - நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மெக்கானிக்கல் சர்க்குலேட்டரி சப்போர்ட் நிறுவனத்தின் இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் ராவ் கூறுகையில், ‘கோவிட்-19 காரணமாக நிமோனியா ஏற்பட்டு மாத்திரை மருந்துகள், மெக்கானிக்கல் வென்டிலேட்டர் என எதுவும் பலன் அளிக்காத நிலையில் அவர்களின் உயிரை காப்பாற்ற எக்மோ கருவி பயனுள்ளதாக உள்ளது’ என்றார்.

Related Stories:

>