×

மாதவரம் பால் பண்ணையில் மத்திய அமைச்சர் ஆய்வுமாதவரம் பால் பண்ணையில் மத்திய அமைச்சர் ஆய்வு

சென்னை: மாதவரம் பால் பண்ணையில் உள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக வளாகத்தில் வண்ண வானவில் தொழில் நுட்ப பூங்கா பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு, பல்வேறு வகையான வண்ண மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும், வண்ண மீன் விற்பனையாளர்களுக்கு மீன் வளர்ப்பு பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த மீன் வானவில் தொழில் நுட்ப பூங்காவை மத்திய மீன் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.சுகுமாரன், பூங்கா தலைவர் பேராசிரியர் ராவணேஸ்வரன், பொன்னேரி மீன்வள கல்லூரி முதல்வர் அகிலன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, ஆவின் பால் உற்பத்தி மையத்தை ஆய்வு செய்தார். அங்கு, பால் உற்பத்தி, விநியோகம் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து பால்வள நிர்வாக இயக்குனர் நந்தகோபால், துணை பொது மேலாளர் சாமமூர்த்தி ஆகியோரிடம் கேட்டறிந்தார்.


Tags : Union Minister ,Madhavaram Dairy , Union Minister inspects Madhavaram dairy farm
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...