×

விடுதலைக்கு 5 நாட்களே உள்ள நிலையில் திடீர் உடல்நலக்குறைவு சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி: ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கண்டுபிடிப்பு; ஐசியூவில் தீவிர சிகிக்சை

பெங்களூரு: சசிகலாவுக்கு நடத்தப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோத னையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது என மருத்து வமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன  அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை முடிந்து விடுதலையாவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2வது முறையாக மூச்சு திணறல் அதிகமானது. இதனால் அவருக்கு அதே மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க முடிவானது. ஆனால் இயந்திரம் பழுதானதால், விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு நேற்று பகல் 2 மணிக்கு சசிகலா கொண்டு செல்லப்பட்டார். பின்னர், மாலை 5 மணிக்கு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கை வெளியிட்டது. அதில், சசிகலா 21ம் தேதி மதியம் 2.30 மணிக்கு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு செய்யப்பட்ட சோதனையில் பல்ஸ் ரேட் 89பிபிஎம் அளவில் உள்ளது. ரத்த அழுத்தம் 120/82 மீமீ என்ற நிலையில் உள்ளது.

ஆக்ஸிஜன் அளவு 98 சதவீதம் உள்ளது. சிடி ஸ்கேன் சோதனையில் தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. தொற்று அளவு 25க்கு 16 என்ற நிலையில் உள்ளது. எனவே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில், ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவருக்கு கொரோனா சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விக்டோரியா மருத்துவமனை யில் கொரோனா சிகிச்சை மையத் தில் சசிகலாவை அனுமதித்து சிகிச்சை அளிக்கலாமா என்பது குறித்து டாக்டர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சசிகலாவை பார்ப்பதற்காக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அவரது குடும்ப டாக்டர் வெங்கடேஷ், உதவியாளர் கார்த்திகேயன், திவாகரன் மகன் ஜெயனாந்த், இளவரசி மகன் விவேக், குடும்ப நண்பர் எம்.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், அமமுக பொருளாளர் மனோகரன், காஞ்சிபுரம் முன்னாள் எம்எல்ஏ பெருமாள் உள்பட பலர் மருத்துவமனை வந்திருந்தனர்.

* சசிகலா குணமடைய வேண்டும்
அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், விரைவில் சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா, அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். அவர், அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. அதே நேரத்தில், சசிகலா பூரண குணம் அடைய வேண்டும் என்பது மனிதாபிமானம் உள்ள எவரும் நினைக்கக்கூடிய விஷயம். அந்த வகையில் சசிகலா சீராக நலம் பெற வேண்டும் என்பதையே நாங்கள் நினைக்கிறோம் என்றார்.

Tags : release ,ICU , Coronavirus infection confirmed by sudden illness within 5 days of release: detection in RTPCR test; Intensive treatment in the ICU
× RELATED சித்திரை திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு