2வது கட்டத்தில் தடுப்பூசி போட்டு கொள்கிறார் மோடி

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், முதல் கட்டமாக மருத்துவர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3  கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கோவிஷீல்டு தடுப்பூசியும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பின்விளைவுகள் ஏற்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இந்த தடுப்பூசியை முதலில் அவர் போட்டுக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில், 2வது கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குட்பட்ட நாள்பட்ட நோயாளிகள் என 27 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த சுற்றில் பிரதமர் மோடியும்,  மாநில முதல்வர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பதாக நேற்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories:

>