ஆன்லைன் வர்த்தகத்தில் 35 லட்சம் கடன் காருக்குள் விஷம் குடித்து தொழிலதிபர் தற்கொலை

தக்கலை: குமரி மாவட்டம் மஞ்சாடிகோணத்திில் ஒரு கார் நின்றதை நேற்று காலை தோட்ட தொழிலாளர்கள் பார்த்தனர். அதில்  வாலிபர் ஒருவர் படுத்த நிலையில் கிடந்தார். அருகில் மது பாட்டில், உணவு பொருட்கள்  இருந்தன. இது குறித்து தகவலறிந்து தக்கலை போலீசார் வந்து பார்த்த போது அவர்  இறந்து கிடந்தது தெரியவந்தது. விசாரணையில் மடத்தூர்கோணம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (36) என்றும், அவரது மனைவி வனஜா, 7, 5 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.  வெல்டிங் தொழிலில் கொரோனா காரணமாக பாதிப்பு ஏற்பட்டதால் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ரூ.35 லட்சத்துக்கு் கடன் ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு மிரட்டல் விடுத்தனர். இதனால் சில மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் தேங்காப்பட்டணம் சென்று தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளது. தற்போது விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: