சிலி சீனியர் அணியை சிதறடித்த இந்திய இளம் மகளிர்

சாண்டியகோ: இந்திய இளம் வீராங்கனைகளை கொண்ட ஜூனியர் ஹாக்கி அணி, தென் அமெரிக்க நாடான சிலிக்கு சென்றுள்ளது. அங்கு சிலி ஜூனியர், சீனியர் அணிகளுக்கு எதிராக 6 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் ஜூனியர் அணியுடன் 2 ஆட்டங்களிலும், சீனியர் அணியுடன் 4 ஆட்டங்களிலும் விளையாட வேண்டும்.  சிலி ஜூனியர் அணியுடனான முதல் 2 ஆட்டங்களிலும் இந்திய ஜூனியர் அணியே வென்றது. இந்நிலையில் நேற்று சிலி சீனியர் மகளிர் அணியுடன் இந்திய ஜூனியர் மகளிர் அணி மோதியது. அந்தப் போட்டியிலும் ஆரம்பம் முதலே இளம் மகளிர் வேகம் காட்டினர்.  ஆனாலும் ஆட்டத்தின் முதல்கோலை  சிலியின் ஃபெர்னான்டா தான் 21வது நிமிடத்தில் அடித்தார். அதன் பிறகு கூடுதல் வேகம காட்டிய இந்திய வீராங்கனைகள் தீபிகா 39வது நிமிடத்திலும், சங்கீதா குமாரி 45வது நிமிடத்திலும்,  லால்ரிந்தகி 47வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோலடித்தனர்.

அதனால் இந்தியா முன்னிலை பெற்றது. எனினும் ஆட்டத்தின் 56வது நிமிடத்தில்   சிலியின் சிமோன்   ஒரு கோல் அடித்தார்.  அதன்பிறகு யாரும் கோலடிக்கவில்லை.  எனவே ஆட்ட நேர முடிவில் 3-2 என்ற கோல்கணக்கில் இந்தியா வென்றது. சீனியர் அணியை வீழத்திய இந்திய இளம் வீராங்கனைகளுக்கு ஹாக்கி இந்தியா உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories:

>