×

தெலங்கானாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு

ஐதராபாத்:  பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் பிரிவினருக்கு கல்வி, அரசு வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை 2 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு கொண்டு வந்தது. இதை தற்போது தனது மாநிலத்தில் அமல்படுத்த, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.   இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், `கல்வி, அரசு வேலை வாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த 2 அல்லது 3 நாட்களில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Telangana , 10% reservation for the economically backward in Telangana
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!