மெரினா கடற்ரையில் வியாபாரம் செய்ய 900 பேருக்கு ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீடு

சென்னை: மெரினா கடற்ரையில் வியாபாரம் செய்ய 900 பேருக்கு ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில், கடற்கரையில் 900 கடைகள் வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதில் 60 சதவீத கடைகள் ஏற்கனவே கடை வைத்திருப்பவர்களுக்கும், 40 சதவீத கடைகள் புதியவர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதற்கான குலுக்கல் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதிஷ்குமார் அக்னிகோத்ரி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடை வைத்துள்ளவர்கள் பிரிவில் 1,348 பேரின் விண்ணப்பங்களும், புதியவர்கள் பிரிவில் 12,974 பேரின் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கான குலுக்கல் கடந்த 2 நாட்களாக ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதிபதி சதிஷ்குமார் அக்னிகோத்ரி முன்னிலையில் நடைபெற்ற இந்த குலுக்கலில் வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு, உதவி வருவாய் அலுவலர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, எற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு 540 கடைகளும், புதியவர்களுக்கு 360 கடைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ரிசர்வ் அடிப்படையில் 90 நபர்களை தேர்வு செய்யப்பட்டனர்.  இவர்களுக்கான கடை எண் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதற்கான  விவரங்களை மாநகராட்சி இணையதளத்திலும், தலைமையகம் மற்றும் 1 முதல் 15 வரை உள்ள மண்டல அலுவலகத்திலும் பார்வையிடலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Related Stories:

>