×

கோட்டயத்தில் பரபரப்பு; அறையில் அடைத்து பெற்றோருக்கு உணவு கொடுக்காமல் சித்ரவதை: தந்தை மரணம்; தாய்க்கு சிகிச்சை- கொடூர மகன் மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயத்தில் வயதான பெற்றோரை தனி அறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்த மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் உணவு கிடைக்காததால் தந்தை இறந்தார். தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவர் பொடியன் (80). இவரது மனைவி அம்மினி (76). இந்த தம்பதி தங்களது இளைய மகன் ரெஜியின் வீட்டில் வசித்தனர். ரெஜி கூலி வேலை செய்கிறார். இதற்கிடையே அவர் தனது வயதான பெற்றோருக்கு உணவு கொடுக்காமல், இருவரையும் வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

வேறு யாரும் பெற்றோர் அருகில் சென்றுவிடாமல் இருக்கும் வகையின் அறையின் முன்பு நாயையும் கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று சுகாதார ஊழியர்கள் அந்த பகுதியில் கணக்கெடுப்பு நடத்தினர். அப்போது ரெஜியின் வீட்டில் கணக்கெடுப்பு நடத்தியபோது வயதான பெற்றோர் வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து சுகாதார ஊழியர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து அறையை திறந்து பார்த்தனர். அப்போது வயதான 2 பேரும் உடல் மெலிந்து பரிதாப நிலையில் கிடந்தனர்.

அவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பொடியன் பரிதாபமாக இறந்தார். பல நாட்களாக உணவு சாப்பிடாததால் அவர் இறந்தது தெரியவந்தது. அம்மினிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Kottayam ,parents ,room , Agitation in Kottayam; Tortured in a room without food for parents: father dies; Mother treatment- Case against abusive son
× RELATED கடனை கேட்டு பெண்ணை தாக்கிய 4 பேர் கைது