×

அதிமுக ஆட்சிக்கு 3 மாதத்தில் முடிவு: வரலட்சுமி மதுசூதனன் பேச்சு

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே நெடுங்குன்றம் ஊராட்சி, ஆலப்பாக்கம் கிராமத்தில் நேற்று திமுக சார்பில், அதிமுகவை நிராகரிக்கிறோம்  என்ற தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆராமுதன் தலைமை தாங்கினார். ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜே.ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சோ.ஆறுமுகம், எல்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வக்கீல் கருணாகரன் வரவேற்றார். இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்கேடி.கார்த்திக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பேசுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்கீழ் 100 நாள் வழங்கவேண்டிய வேலையை 3 நாள் கொடுக்கும் அதிமுக ஆட்சிக்கு இன்னும் 3 மாதத்தில் முடிவு கட்டி, திமுக ஆட்சிக்கு வரும். அப்போது மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதி கூறினார். இதில் தொழிலதிபர் ஆப்பூர் மதுசூதனன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏவிஎம்.இளங்கோவன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆலப்பாக்கம் பொறுப்பாளர் ராஜன் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Tags : AIADMK ,speech ,Varalakshmi Madhusudhanan , AIADMK rule ends in 3 months: Varalakshmi Madhusudhanan's speech
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...