×

சென்னை சாலைகளில் பிச்சை எடுக்கும் வடமாநில குழந்தைகள்; பிச்சை எடுக்க வைப்பது மாஃபியா கும்பலா?

சென்னை: சென்னை சாலைகளில், பிரதான சிக்னல்களில் குழந்தைகள் கார் கண்ணாடியை தட்டியும், இருசக்கர வாகன ஓட்டிகளிடமும் பிச்சை எடுக்கும் காட்சி என்பது காண்போரை கண்ணீரை வரவழைக்கிறது. குடும்ப வறுமைக்காக, பசி கொடுமைக்காக குழந்தைகள் கையேந்துவதோடு சட்ட விரோதமான சில கும்பல்களால் அவர்கள் பிச்சை எடுக்கும் தொழில் ஈடுபடுத்தப்படுவதும் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான குழந்தைகளை ஆந்திரா, உத்திரப்பிரதேசம், ஒடிசா, பீகார், ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக தரகர்கள் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

அந்த குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிக்னல்களில் பொருட்களை விற்பதற்கும் அந்த குழந்தைகளை ஈடுபடுத்தி வருவது தெரிய வந்துள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வரும் குழந்தைகள் பெற்றோரின் வறுமை காரணமாகவும், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பணம் சம்பாதிக்கும் நோக்கில் விற்கும் கொடுமையும் அரங்கேறி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சாலைகளில் பிச்சை எடுத்து கொண்டிருந்த 135 குழந்தைகளை மீட்டு அரசு விடுதிகளிலும், தனியார் தொண்டு நிறுவனங்களிடமும், ஒப்படைத்துள்ளது சென்னை காவல்துறை.

பல குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை கடத்தும் தரகர்களை பிடிக்க சென்னை சென்ட்ரல், எழும்பூர் போலீசாரும் களமிறக்கப்பட்டுள்ளனர். படிக்க வேண்டிய வயதில் குழந்தைகள் கையேந்தி பிச்சை எடுக்கும் அவலம் எப்போது மாறும்? குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் மாஃபியா கும்பல்கள் எங்கிருந்து செயல்படுகின்றன? தெருக்களில் சுற்றித்திரியும் குழந்தைகளை சூழ்ந்திருக்கும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளுக்கு தீர்வு எப்போது கிடைக்கும்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.


Tags : children ,roads ,Chennai ,Mafia ,gangs , Northern children begging on Chennai roads; Is it the mafia gang that makes you beg?
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்