தென்சென்னை பகுதிக்கு நிர்வாகிகள் நியமனம்: அதிமுக அறிவிப்பு

சென்னை: தென்சென்னை பகுதிக்கு பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தின், மாவட்ட அளவிலான சார்பு அமைப்புகளின் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி எம்.ஜி.ஆர் இளைஞர் அணியில் மாவட்டச் செயலாளர் அபிசேக் ரங்கசாமி மற்றும் துணைச் செயலாளர் முத்து பரணி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். தொடர்ந்து மகளிர் அணியில் மாவட்ட தலைவர் வளர்மதி மற்றும் இணைச் செயலாளர் கலைச்செல்வி, மாணவர் அணியில் மாவட்டச் செயலாளர் சுனில்,

அண்ணா தொழிற்சங்கம் மாவட்டச் செயலாளர் ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் அருள்தாஸ், இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் இம்தியாஸ் பாட்ஷா, மாவட்டச் செயலாளர் லட்சுமி நாராயணன், இணைச் செயலாளர் வெங்கடேஷ், துணைச் செயலாளர்கள் சுதாகர், சரவணராஜ், சேப்பாக்கம் ஸ்ரீ (எ) ஸ்ரீகாந்த் மற்றும் கண்ணன், வர்த்தக அணியில் மாவட்டச் செயலாளர் சங்கர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>