பிசிசிஐக்கு ஆஸ்திரேலியா நன்றி

சிட்னி: இந்திய கிரிக்கெட்அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  ஒருநாள் தொடரை 2-1 என பறிகொடுத்தது. டி.20 தொடரை 2-1, டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் கொரோனா கால கட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா நன்றி தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில, கொரோனா என்னும் கொடிய அரக்கன் உலகை ஆட்டிப் படைக்கும் இக்கால கட்டத்தில் எங்கள் (ஆஸ்திரேலியா) நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கடுமையான மருத்துவப் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றமைக்காக பிசிசிஐக்கு எங்களின் மனப்பூர்வமான நன்றிகள்.

கொரோனா ஊரடங்கால் மக்கள் முடங்கிக் கிடந்த நிலையில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் அமைந்தது. இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளைச் சிறப்பாக கடைப்பிடித்தனர். அவர்களுக்கும் நன்றிகள். இந்த இக்கட்டான நிலையில் பிசிசிஐ ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்குச் சம்மதித்ததை ஒருபோதும் மறக்க மாட்டோம்”.போட்டியை நடத்த உறுதுணையாக இருந்த அரசு, மருத்துவக் குழு, ஒளிபரப்பு உரிமம் பெற்றவர்கள், மைதான ஊழியர்கள், வீரர்கள், நடுவர்கள் போன்ற அனைவருக்கும் நன்றிகள்.

இந்த சுற்றுப் பயணத்தில் சிறப்பாக செயல்பட்டு பார்டர்-கவாஸ்கர் டிராபியை தக்க வைத்துக் கொண்ட இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். தைரியம் மற்றும் திறமைக்கு டீம் இந்தியாவை வாழ்த்துகிறோம், இது ஒரு தொடரில் வரவிருக்கும் தலைமுறைகளாகப் பேசப்படும், இவ்வாறு தெரிவித்துள்ளது.

Related Stories:

>