×

சீன ஆன்லைன் கந்துவட்டி செயலி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி உத்தரவு: வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பதால் மாற்றம்

சென்னை: சீன ஆன்லைன் கந்துவட்டி செயலி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய சீனர்களிடம் விசாரிக்க உள்ளதால் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீனா, சிங்கப்பூரில் இருந்து அழைத்து வந்து விசாரிக்க உள்ளதால் வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பதாலும் வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என டிஜிபி கூறினார். 5 மாநிலங்களிலும் வழக்கு விசாரணைக்கு தொர்பு இருப்பதால் மாற்றம் செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக கந்துவட்டிச் செயலியை இயக்கி வந்த  இரண்டு சீனர்கள் உள்ளிட்ட நால்வரை சென்னை மத்திய குற்றப்பிரிவு கடந்த 3-ம் தேதி பெங்களூரில் 4 பேரை கைது செய்தது. அதில் 2 சீனர்கள், 2 பேர் கால் சென்டரில் பணிப்புரிந்தவர்கள். கைது செய்யப்பட்ட இரண்டு  சீனர்களிடமிருந்து இரண்டு மடிக்கணினிகள், ஆறு மொபைல் போன்கள், இரண்டு சீன பாஸ்போர்ட் மற்றும் ஏடிஎம் கார்டுகளை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் மீது இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம், தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : CPCIT: Change ,Chinese , Chinese Online, interest, processor case, to CPCIT
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...