ஊரடங்கு தளர்விற்கு பின் தாவரவியல் பூங்காவில் சினிமா சூட்டிங்

ஊட்டி:  கொரோனா ஊரடங்கிற்கு பின் முதன்முறையாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தமிழ் திரைப்பட படப்பிடிப்பு நேற்று நடந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பசுமையான புல்வெளிகள், மலைகள் உள்ளிட்ட இடங்களில் பரவலாக திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா இடம் பெறாத பல்வேறு மொழி திரைப்படங்களே இல்லை என்றால் மிகையாகாது. அதன்பின் ஊட்டியில் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் சினிமா படங்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனால் நீலகிரியில் படப்பிடிப்புகள் நடத்தப்படுவது குறைந்தது. ஆண்டுக்கு 5 முதல் 10 படங்களின் சூட்டிங் மட்டுமே நடைபெறுகிறது.

தற்போது குறைந்த அளவிலான படப்பிடிப்புகளே நடத்தப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு ெகாரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. சுமார் 6 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் ஏதுவும் நடைபெறாதவில்லை. இதனைத்தொடர்ந்து கடந்த படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டு கடந்த இரு மாதங்களாக பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த ஒராண்டிற்கு பின் ஊட்டி தாவரவியல் பூங்காவில் தமிழ் திரைப்பட படப்பிடிப்பு நேற்று நடந்தது. பூங்காவில் சூட்டிங் நடத்த ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்தி படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய இயக்குநர் எழில் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், சாய் பிரியா ஆகியோர் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. இதனை பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் ராஜேஷ்குமாரின் நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டது. தாவரவியல் பூங்கா மட்டுமின்றி ஊட்டியின் பிற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர். இதேபோல் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ஊட்டியின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>