×

சின்னாளபட்டியில் ஆதரவற்று தவித்த மூதாட்டியை மீண்டும் காப்பகத்திற்கு அனுப்பினர்: நிறுத்திய முதியோர் உதவித்தொகையும் வழங்கப்பட்டது

சின்னாளபட்டி: சின்னாளபட்டி மேட்டுப்பட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில் முன்பு பாக்கியம்மாள் என்ற மூதாட்டி ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்தார். இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானதன் எதிரொலியாக அதிகாரிகள் உடனே பாக்கியம்மாளை மீட்டு முதியோர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் முதியோர் உதவித்தொகை வராததால் பாக்கியம்மாளை காப்பகத்தி–்ல் இருந்து வெளியே அனுப்பி விட்டனர். இதனால் பாக்கியம்மாள் மீண்டும் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் முன்பு பிச்சை எடுத்து தங்கி வந்தார். இதுகுறித்து நேற்றை தினகரனில் மீண்டும் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்றே அதிகாரிகள் வந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகையை பாக்கியம்மாளிடம் வழங்கினர். தொடர்ந்து அவரை முதியோர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தனர்.

ஆனால் அவர், அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு நான் இங்கேயே இருந்து விடுகிறேன். நீங்கள் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விடுவீர்கள், அங்கு இருப்பவர்கள் உனக்கு மாத உதவித்தொகை வருகிறதா என கேட்டுவிட்டு மீண்டும் என்னை அனுப்பி விடுவார்கள்’ என்றார். பின்னர் தனிவட்டாட்சியர் சரவணவாசன், வருவாய் ஆய்வாளர் பாக்கியலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் சாகிராபானு, ஜெயலட்சுமி ஆகியோர் பாக்கியம்மாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து பாக்கியம்மாள் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளாக சின்னாளபட்டியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் நூற்றுக்கணக்கான முதியோர்கள் சோகத்திலும், துக்கதிலும் இறந்து போய் உள்ளனர். என்போன்றவர்களுக்கு இந்த உதவித்தொகையே கடைசி வாழ்வாதாரம். எனவே தமிழக அரசு முதியோர் உதவித்தொகையை நிறுத்தாமல் வழங்க வேண்டும்’ என்றார்.



Tags : Chinnalapatti , An old woman who was left helpless in Chinnalapatti sent back to the archive
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...