×

வேளச்சேரியா?..வெள்ளசேரியா!: வேளச்சேரி ஏரிகளை சீரமைக்காத தமிழக அரசை கண்டித்து திமுக-வினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: வேளச்சேரி ஏரிகளை சீரமைக்காத தமிழக அரசை கண்டித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளச்சேரி பகுதியில் இருக்கும் ஏரிகளை தூர்வாருதல் உள்ளிட்ட சீர்படுத்தப்படும் நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களாக இருந்தன. இந்நிலையில் இத்திட்டங்கள் அனைத்தும் தமிழக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமானது வேளச்சேரியில் நடைபெற்று வருகிறது. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டம் வேளச்சேரியா? அல்லது வெள்ளசேரியா என்ற முழக்கத்துடன் நடைபெற்று வருகிறது.

15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ள இந்த பிரம்மாண்ட போராட்டத்தில், திமுக தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ்  மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், வர்த்தக அணி செயலாளர் கார்த்திக் முத்துமாணிக்கம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த போது சேத்துப்பட்டு ஏரி மற்றும் வேளச்சேரி ஏரிகளை தூர்வாரி சீரமைத்து அதனை சுற்றுலாத்தலமாக்கும் முடிவினை அறிவித்தது.

அதன் அடிப்படையில் சேத்துப்பட்டு ஏரி மீன்வளத்துறை நடவடிக்கையோடு அழகுற செய்யப்பட்டது. ஆனால் வேளச்சேரி ஏரியின் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்ட நிலையிலேயே இருந்து வந்துள்ளது. 2018ம் ஆண்டு வேளச்சேரி ஏரிகளை சீரமைக்க 25 கோடியை தமிழக அரசு ஒதுக்கி இருந்தது. இருப்பினும் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இதனை கண்டித்தே தற்போது வேளச்சேரியில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Tags : Velachery , Velachery, Lake, Government of Tamil Nadu, DMK, Demonstration
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...