×

சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை: RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை

பெங்களூரு: சசிகலாவுக்கு RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என தகவல் கூறப்பட்டுள்ளது. முன்னதாக RAPID பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறிப்பட்டது. ஆக்சிஜன் உதவியுடன் பெங்களூரு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையளிக்கப்படுகிறது என மருத்துவர் மனோஜ் கூறினார். சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது எனவும், தொடர்ந்து மருத்துவ சிகிச்கைகள் தேவைப்படுவதாகவும் மனோஜ் தகவல் கூறினார். சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள பவ்ரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 27-ல் விடுதலையாகவிருந்த நிலையில் சசிகலா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அவரது தம்பி திவாகரன் கூறினார். சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ள நிலையில் சிறையில் சரியான சிகிச்சை தரவில்லை என திவாகரன் குற்றம் சாட்டினார்.

நேற்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகுதான் சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறினார். பரப்பன அக்ரஹா சிறை மருத்துவமனையில் சாதாரண எக்ஸ்ரே மட்டுமே எடுத்து பார்த்துள்ளனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிடி ஸ்கேன் எடுக்க கோர்ட் அனுமதி தேவை என்கிறார் என கூறினார். சிறையிலிருந்து சசிகலா 27-ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் சரியாக சிகிச்சை தராமல் தாமதப்படுத்துகின்றனர். எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடந்து வருகிறது எனவும் கூறினார். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், தற்போது பணம் எதுவரை பாய்ந்தது என தெரியவில்லை எனவும் கூறினார். மூச்சுத்திணறல் ஏற்பட்டால் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.


Tags : Sasikala , Sasikala, RAPID test, in RT-PCR, corona, no
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது