×

பூடான், மாலத்தீவுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: இந்தியா அனுப்பி வைத்தது

புதுடெல்லி: இந்தியாவினால் அனுப்பிவைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை  பூடான் மற்றும் மாலத்தீவு நாடுகளை சென்றடைந்தது. இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட்  மற்றும் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகள்,  பூடான், மாலத்தீவு, மொரீசியஸ், பிலிப்பைன்ஸ், மியான்மர் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் இலவசமாக வழங்கப்படும் மத்திய அரசு அறிவித்து இருந்தது.  
இதனை தொடர்ந்து முதல் கட்டமாக பூடான் மற்றும் மாலத்தீவுக்கு கொரோனா தடுப்பு மருந்து அனுப்பிவைக்கப்பட்டது.  

இந்தியா சார்பில் முதன் முதலில் இலவசமாக அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகள் நேற்று பூடான் மற்றும் மாலத்தீவு நாடுகளை சென்றடைந்தது. மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகள் மாலத்தீவை சென்றடைந்தன. பூடானும் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக்கொண்டது. இது இது இருநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த நட்பை பிரதிபலிக்கின்றது” என பதிவிட்டுள்ளார். மேலும் இது  குறித்த புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பூடானுக்கு 1.5லட்சம் கோவிஷீல்ட் டோஸ்களும், மாலத்தீவுக்கு ஒருலட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனுமதி உறுதி செய்யப்பட்டபின்னர் ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், மொரீசியஸ் நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அனுப்பி வைக்கும். நெஞ்சுவலியால் சுகாதார ஊழியர் பலி: தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தை சேர்ந்த 42வயது சுகாதார ஊழியர் நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு 2.30 மணியளவில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். சிகிச்சை பலனின்றி காலை 5.30மணிக்கு உயிரிழந்தார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் சுகாதார ஊழியர் இறந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Tags : Maldives ,Bhutan ,India , Free Corona Vaccine for Bhutan, Maldives: Sent by India
× RELATED மேலும் பல இந்திய வீரர்கள்...