×

கேப்டனாக ரகானே அசத்தல்: கோஹ்லிக்கு நெருக்கடி

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அசத்தலாக வென்றுள்ளது இந்திய அணி. அதிலும் முக்கிய ஆட்டக்காரரான கோஹ்லி இருந்த போட்டியில் தோற்றாலும், அடுத்த 3 போட்டிகளில் சிறப்பாக விளையாடி  தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதற்கு எல்லா வீரர்களின் பங்களிப்பும் காரணம் என்றாலும்,  தற்காலிக கேப்டன்  அஜிங்க்யா ரகானேவின் மதியூகமிக்க தலைமைதான் முக்கிய காரணம் என்று பாராட்டப்படுகிறது. முக்கிய வீரர்கள் காயம் உட்பட பல்வேறு காரணங்களால் விலகினாலும், பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்ட வீரர்களை  பயன்படுத்தி வியக்கத்தக்க வெற்றியை இந்தியா பெற்றுள்ளது.

இந்நிலையில், சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள  டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி தொடங்குகிறது. அதற்கான டெஸ்ட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் விராத் கோஹ்லி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவருடன் காயம் காரணமாக விலகியிருந்த முன்னணி வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனால்  இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு, வெளிநாட்டில் திறமையான ஆஸி. அணியை வென்று  ரகானே சாதித்து உள்ளார். மேலும், அவர் கேப்டனாக செயல்பட்ட 5 டெஸ்டில் 4 வெற்றி, 1 டிராவுடன் தோல்வி காணாத கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக கோஹ்லியும், டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக ரகானேவையும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ரகானேவின் இந்த எழுச்சி, கோஹ்லிக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகவே கிரிக்கெட் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Tags : Crisis ,Kohli , Raghane awkward as captain: Crisis for Kohli
× RELATED பா.ஜ.க. திட்டத்தால் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி..!!