காஷ்மீர் எல்லையில் அத்துமீறல் பாக். தாக்குதலில் 4 வீரர்கள் காயம்

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் அக்னூரில் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது,  பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி இந்திய நிலைகளை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். எனினும், பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர்கள் நான்கு பேர் காயமடைந்தனர். சக வீரர்கள் மூலமாக உடனடியாக மீட்கப்பட்ட இவர்கள், உதம்பூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>