×

டெல்லியில் 7.8 டிகிரி செல்சியஸ் பதிவு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 7.8 டிகிரி செல்சியசாக பதிவானது. புதிதாக மேற்கு திசையில் காற்று வேகமாக வீசத்தொடங்கி இமயமலையை நோக்கி தாக்கும் வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த திங்கள் கிழமைக்குள் நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை சரிவடைந்து 4 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, நிலப்பகுதியில் காற்று வேகமாக வீசியதன் காரணமாக டெல்லியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 7.8 ஆக பதிவானதோடு, காற்றின்தரமும் மேம்பாடு அடைந்தது. நகரில் காற்றுத்தரக்குறியீட்டு எண் நேற்று காலை 9 மணியளவில் 308 ஆக இருந்தது. காற்றின் தரம் இந்த மாதம் ஆறாவது முறையாக கடந்த  செவ்வாய்க்கிழமையன்று கடுமை பிரிவுக்கு மாறியது. நகரின் 24 மணி நேர காற்றுத்தரக்குறியீடு எண் கடந்த செவ்வாயன்று 404 ஆகவும், திங்களன்று 372 ஆகவும், ஞாயிற்றுக்கிழமை 347 ஆகவும் பதிவாகியிருந்தது. அதற்கு முன்பாக, டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மூன்று நாட்கள் கடுமை பிரிவில் பதிவாகியிருந்தது.

Tags : Delhi , 7.8 degrees Celsius recorded in Delhi
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு