வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் பிரமாண்ட பேரணி: சித்தராமையா, டி.கே.சிவகுமார் கைது; ஆளுநரிடம் நேரில் மனு

பெங்களூரு: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிரமாண்ட பேரணி:- கொரோனா தொற்று காரணமாக காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட மாநாடுகள், போராட்டங்கள் நடத்தாமல் அமைதி காத்த நிலையில், 9 மாதங்களுக்கு பின் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் பெங்களூருவில் நேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடத்தியது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு நியாயம் வழங்க வேண்டும்.

ஏபிஎம்சி சட்ட திருத்தம் திரும்ப பெற வேண்டும், எல்லை மீறி போய் கொண்டிருக்கும் பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும், மாநில அரசு கொண்டுவந்துள்ள நில சீர்த்திருத்த சட்டம், ஏபிஎம்சி சட்டம், பசுவதை தடை சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி நடத்திய பேரணியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து சுதந்திர பூங்கா வரை நடந்த பேரணியில் கட்சி கொடியுடன் தொண்டர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆவேசத்துடன் முழக்கம் எழுப்பினர். பேரணி காரணமாக சேஷாத்திரிசாலை, அனந்தராவ் சர்க்கிள், கே.ஆர்.சர்க்கிள், ரேஸ்கோர்ஸ் சாலை

7ம் பக்கம் பார்க்க

* மயங்கி விழுந்த காங்கிரஸ் எம்எல்ஏ

பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் பெண் எம்எல்ஏ அஞ்சலி நிம்பால்கர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக  போலீசார் தூக்கி சென்று வேனில் அமர்த்தி தண்ணீர் கொடுத்தனர். சில நிமிடங்கள் ஓய்வு எடுத்த பின் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

Related Stories:

>