வெளியே நடமாட முடியவில்லை தூசி நகரமாக மாறி வரும் பூங்கா நகரம்: வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பெரும்பான்மையான சாலைகளில் தூசிகள் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பலருக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு மாநகரில் பெரும்பான்மையான சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. மாநகராட்சி ஆணையர் மற்றும் பெங்களூரு வளர்ச்சி துறை அமைச்சர் ஆகியோர் சாலைகளை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட சாலைகளில் மணல் குவிந்து போக்குவரத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சேஷாத்திரி சாலை, தீயணைப்பு நிலையத்தின் அருகே கண்ணில் தூசி விழுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் இருபுறமும் குடிநீர் பைப், பிஎஸ்என்எல் உள்பட பல்வேறு செல்போன் நிறுவனங்களின் கேபிள்கள் உள்பட பல பணிகளை பூமி அடியில் பதிக்கும் பணிகள் நடந்து வருவதால் சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களில் இருந்து வெளியேறும் மண்கள் குவிந்து காற்றில் தூசியாக பரவுகிறது. இதனால் பல  சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

ரேஸ்கோர்ஸ் சாலை, சேஷாத்திரி சாலை, ராஜாராம்மோகன்ராய் சாலை, ரிச்மெண்ட் சாலை, குயின்ஸ் சாலை, கப்பன்சாலை, காமராசர் சாலை உள்பட பல சாலைகளில் சாலைகளில் இரண்டு பக்கமும் அதிக அளவில் மண், மணல் குவிந்துள்ளது. மாநகர பஸ்கள் சென்றால் அதன் பின்னால் வேறு யாரும் செல்ல முடியவில்லை. மழை பெய்ததால், சாலைகள் பெயர்ந்துள்ளது மட்டுமின்றி மணல்களும் குவிந்துள்ளதால், மோட்டார் சைக்கிளில் செல்வோரும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு அலுவலகம் செல்வதற்குள் இரண்டு கண்களும் தூசியால் நிரம்பி விடுகின்றன. தலைக்கவசம் அணிவதால் ஓரளவிற்கு தூசியின் பாதிப்பில் இருந்து தப்பிவிட இயலும் என்பது உண்மைதான். ஆனாலும் பிஎம்டிசி பஸ்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தூசிகள் தலைக்கவசத்தை தாண்டி வந்து முகத்தில் படிந்து விடுகிறது. சற்று முன்பு இதே பகுதியில் சென்ற பிஎம்டிசி பஸ் கிளப்பிய தூசி, இரண்டு கண்களும் நிரம்பியதால் இப்படி நிற்கிறேன் என்று சிவராமப்பா என்ற பைக் பயணி ஆதங்கம் வெளிப்படுத்துகிறார்.

இதுபோல் ஒருவர் மட்டும் அல்ல... தினமும் சாலைகளில் பயணம் செய்கிற பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகிறார்கள். காரில் செல்லும் அதிகாரிகள், கண்ணாடிகளை ஏற்றி விட்டு ஹாயாக செல்வதால் சாதாரண மக்களின் அவஸ்தை தெரிவதில்லை. சேஷாத்திரி சாலை மட்டும் அல்ல, மாநகரின் பெரும்பாலான சாலைகளில் இதே நிலைதான் என்கிறார்கள், தூசியால் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் பயணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகள் நடக்கும் இடத்தில் மண் தூசிகள் வெளியில் வராமல் தடுப்பு அமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல் நடைப்பாதையில் செல்வோரின் கோரிக்கையாக உள்ளது. காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு  அலுவலகம் செல்வதற்குள் இரண்டு கண்களும் தூசியால் நிரம்பி விடுகின்றன. தலைக்கவசம் அணிவதால் ஓரளவிற்கு தூசியின் பாதிப்பில் இருந்து தப்பிவிட  இயலும் என்பது உண்மைதான்.

Related Stories:

>