ஆட்டோவில் பயணம் மர்ம நபர்கள் டிரைவரிடம் செல்போன் அபேஸ்

புழல்: பம்மதுகுலம் ஈஸ்வரன் நகர் 1வது மெயின் தெருவை சோர்ந்தவர் அக்பர் பாஷா (52).  இவர் ஆட்டோ டிரைவர். மூலக்கடைலிருந்து மதுரவாயில் செல்ல வேண்டும் என்று நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் இவர் வண்டியில் ஏறி உள்ளார். ஆட்டோ, சிறிது தூரம் சென்றதும் மற்றொரு நபரும் இதேப்போன்று ஏறியுள்ளார். புழல் கதிர்வேடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, ஆட்டோவில் இருந்த ஒருவர் வாந்தி வருவது போல் நடித்துவிட்டு கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்து சென்றனர்.

Related Stories:

>