தமிழகத்தில் போட்டியிடும் தொகுதிகளில் பாஜவை தோல்வியடைய செய்வோம்: தமிழ் சமூக அரசியல் அமைப்புகள் பேட்டி

சென்னை: தமிழகத்தில் பாஜ எந்த தொகுதியில் நின்றாலும் அக்கட்சியை தோல்வியடைச் செய்வோம் என்று தமிழ் சமூக அரசியல் அமைப்புகள் அறிவித்துள்ளது. தமிழக சட்டப் பேரவை தேர்தலில், ‘மக்கள் விரோத பாஜவை தோற்கடிப்போம்’ என்ற முழக்கத்துடன் 75க்கும் மேற்பட்ட தமிழ் சமூக அரசியல் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.கூட்டத்தை தொடர்ந்து, தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் பாலன் நிருபர்களிடம் கூறியதாவது:மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பின்பு நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயற்சி செய்கின்றனர். ஜிஎஸ்டி, கல்வி, வேளாண்மை, சட்ட ஒழுங்கு என மாநில பட்டியல் விவகாரங்களில் மத்திய அரசு சட்டம் இயற்றுகிறது. தமிழக அரசியலை குழப்பி நிலையற்ற தன்மைக்கு மாற்றுகிறார்கள். இப்படிப்பட்ட மத்திய பாஜ அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

அதற்காக, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜ போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அவர்களை தோல்வியடைய செய்ய வேண்டும் என்று மக்களுக்கு அறைகூவல் விடுகிறோம். எங்களது கூட்டியக்கம், பாஜ போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடையச் செய்யும் வகையில் செயல்படுவார்கள். தமிழகத்தில் பாஜவை காலூன்ற விடாமல் தடுக்க வேண்டியது வரலாற்று கடமை. எனவே பாஜ எதிர்ப்பில் அக்கறையுள்ள ஜனநாய சக்திகள் அனைவரும் வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் பாஜவை தோற்கடிக்கும் இயக்கத்தில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>