பெரும்பாலான வியாபாரிகள் பங்கேற்காத நிலையில் நீதிபதி முன்னிலையில் மெரினா கடைகளை ஒதுக்கீடு செய்ய குலுக்கல்: ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: மெரினா கடற்கரையை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் கடற்கரையில் 900 கடைகள் வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதில் 60 சதவீத கடைகள் ஏற்கனவே கடை வைத்திருப்பவர்களுக்கும், 40 சதவீத கடைகள் புதிதாக வைக்க விரும்புவர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுவும் குலுக்கல் முறையில் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதன்படி குலுக்கல் நேற்று ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நடைபெற்றது. இதில் நீதிபதி சதிஷ்குமார் அக்னிகோத்ரி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், துணை ஆணையர் மேகநாத ரெட்டி, வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு, உதவி வருவாய் அலுவலர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் குலுக்கலில்  கலந்துகொள்ளவில்லை. இதன்பிறகு குலுக்கல் தொடங்கி 900 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டி : பிற்பகல் 3.30 மணி முதல் வகை “ஆ” விண்ணப்பதார்ரகளில் 360 நபர்களும் ஆக மொத்தம் குலுக்கல் முறையில் 900 நபர்களையும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 900 நபர்களில் விருப்பமின்மை அல்லது தகுதியின்மை காரணமாக நிராகரிக்கப்படும்பட்சத்தில் 10 சதவிகிதம்  ரிசர்வ் அடிப்படையில் “அ ” வகையில் 54 நபர்களும் “ஆ”  வகையில் 36 நபர்களும் ஆக மொத்தம் 90 நபர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் விவரத்தினை சென்னை மாநகராட்சி இணையதளத்திலும் வருவாய் துறை தலைமையகம் மற்றும் 1 முதல் 15 வரை உள்ள மண்டல அலுவலகத்திலும் பொதுமக்கள் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து  குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 900 நபர்களுக்கு 21.01.2021 (இன்று) காலை 11.00 மணி முதல் கிரசென்ட் விளையாட்டு திடல் அருகில், பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா அரங்கத்தில் குலுக்கல் முறையில் ஸ்மார்ட் கடை எண் ஒதுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் கலந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வியாபாரிகள் கடற்கரை சாலையில் போராட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் 900 பேருக்கு கடைகள் ஒதுக்குவது தொடர்பான குலுக்கல் நேற்று ஷெனாய் நகரில் நடந்தது. இந்த குலுக்கல் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ்குமார், அக்னிகோத்ரி முன்னிலையில் நடந்தது. இந்நிலையில் குலுக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்ப்பட்ட வியாபாரிகள் கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கையில் பதாகைகளை ஏந்தி ஏற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு குலுக்கல் முறையில் இல்லாமல் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். அப்போது காவல் துறை இணை ஆணையர் சுதாகர் தலைமையில் போலீசார் வந்து பேச்சுவார்த்ைத நடத்தினர். 10 பேரை மட்டும் மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்வதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் ேபாராட்டத்ைத தற்காலிகமாக கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு சென்றனர். 

Related Stories:

>