×

தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் சிலைகள் மாயம்: அறநிலையத்துறை அறிக்கை தர உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை:  தமிழகத்தில் பல கோயில்களில் இந்த பதிவேடுகள் காணாமல் போனதால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கோயில் சொத்துகள் குறித்த விவரங்களை அறநிலையத் துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதில் பல கோயில்களின் சொத்துகள், சிலைகள் மாயமானது தெரிய வந்துள்ளதாக கூறி, சொத்து ஆவணங்கள், சிலைகள் மாயமானது குறித்து சிபிசிஐடி, தொல்லியல்துறை அடங்கிய கூட்டு புலன் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எந்தெந்த கோயில்களில் உள்ள சிலைகள் மாயமாகியுள்ளன என்பதை கண்டறிந்து அறிக்கையாக தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைய துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நஇந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Idols ,temples ,Tamil Nadu ,High Court , Idols in which temples in Tamil Nadu are magic: High Court orders action
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு