×

தனி நபர்கள் அளிக்கும் ஆக்கிரமிப்பு புகார் பொதுநல வழக்கு ஆகாது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு நிலம் ஆக்கிரமிப்புக்கு எப்போதும் அனுமதிக்க முடியாது. அதேநேரம், அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்வதை எதிர்த்த தனி நபர்கள் புகார்களை, பொதுநல வழக்காகவும் கருத முடியாது.
ஆக்கிரமிப்பு என தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்க வேண்டும்.  அந்த புகார்களை சட்டப்படி பரிசீலித்து ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம்.  பொது நல வழக்காக தொடர முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை, சட்டவிதிகளை பின்பற்றி மனுதாரரின் மனுவை பரிசீலித்து அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும். தனி நபர் புகார்கள் தொடர்பான வழக்குகளை பொது நல வழக்காக விசாரணைக்கு எடுக்க கூடாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.



Tags : individuals ,Chennai High Court , Complaint of aggression filed by individuals will not be a welfare case: Chennai High Court opinion
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...