×

கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பீதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கருவாற்றா, கருமாடி, தகழி, நெடுமுடி மற்றும் பள்ளிப்பாடு பஞ்சாயத்துகள் மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள நீண்டூர் பஞ்சாயத்தின் 14வது வார்டில் கடந்த டிசம்பர் இறுதி வாரத்தில் பறவை காய்ச்சல் பரவியது. இதில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாத்துகள் இறந்தன. இதையடுத்து நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் ஒரு கி.மீட்டர் சுற்றளவில் கோழிகள், வாத்துகள், அலங்கார பறவைகள் உட்பட 36 ஆயிரம் பறவைகள் கொல்லப்பட்டு, எரித்து புதைக்கப்பட்டன.

மேலும் கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தேசிய பேரிடராகவும் அறிவிக்கப்பட்டது. பறவை காய்ச்சலால் கோழி இறைச்சி, முட்டை விலை கடுமையாக சரிந்தது. அரசின் நடவடிக்கையால் பறவை காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ேகரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கைநகரி பகுதியில் கடந்த சில தினங்களாக ேகாழிகள் திடீரென ெசத்து விழுந்தன. இதையடுத்து கோழிகளின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பறவை காய்ச்சலால் கோழிகள் இறந்த விஷயம் தெரியவந்தது.

இதையடுத்து கைநகரியை சுற்றியுள்ள 1 கி.மீ சுற்றளவில் 2,300க்கும் ேமற்பட்ட கோழிகள், வாத்துகள் உட்பட வளர்ப்பு பறவைகளை கொல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பை அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kerala , Bird flu scare back in Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...