பைக் வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை: ஆவடி அருகே பரிதாபம்

ஆவடி: பெற்றோர் பைக் வாங்கித் தராததால் வாலிபர் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவடி அருகே கோயில்பதாகை கலைஞர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் பாதுகாப்புத்துறை ஊழியர். இவரின் மகன் பரத்குமார் (22). இவர் பிகாம் முடித்துள்ளார். இந்த நிலையில், தனக்கு பைக் வாங்கித்தரவேண்டும் என்றுதந்தையிடம் தொடர்ந்து கேட்டுள்ளார். அதற்கு தங்கராஜ், ‘’தற்போது பணம் இல்லை. கொஞ்சநாள் கழித்து வாங்கி தருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் பரத்குமார், விடாப் பிடியாக பைக் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்றிரவு சாப்பிடாமல் தனது படுக்கை அறைக்கு பரத்குமார் சென்று விட்டார்.

வழக்கமாக செல்வதுபோல் சென்றுவிட்டார் என்று பெற்றோர் நினைத்து விட்டனர். திடீரென பெற்றோர், நள்ளிரவு 2 மணி அளவில் கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது பரத்குமார், தூக்கில் பிணமாக கிடந்தது பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றிய புகாரின்படி, இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories:

>