மேற்கு வங்க சாந்திபூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அரிந்தம் பாஜகவில் இணைந்தார்

டெல்லி: மேற்கு வங்க மாநிலம் சாந்திபூர் சட்டமன்ற தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அரிந்தம் பட்டாச்சார்யா பாஜகவில் இணைந்தார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக பொதுச் செயலாளர் மற்றும் மேற்கு வங்க பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்ஜியா முன்னிலையில், அரிந்தம் பட்டாச்சார்யா பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து, அரிந்தம் பட்டாச்சார்யா பொன்னாடை அணிவித்து வரவேற்ற கைலாஷ் விஜயவர்ஜியா, பாஜக அடிப்படை உறுப்பினர் அட்டை வழங்கினார்.

Related Stories:

>