×

பேரறிவாளனை விடுவிப்பது பற்றி குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்..! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

டெல்லி: பேரறிவாளனை விடுவிப்பது பற்றி குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பேரறிவாளனை விடுவிப்பதில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது பற்றிய பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் பேரறிவாளனை விடுவிப்பதில் ஆளுநரே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக, குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிப்பது தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது குறித்து மாநில ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்று பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : President ,release ,Perarivalan ,Supreme Court , It is up to the President to decide on the release of Perarivalan ..! Federal Interpretation in the Supreme Court
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...