மதிமுகவில் நிர்வாகிகள் நியமனம்: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுகவில் மாவட்ட பொறுப்பாளர், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து தலைமை வெளியிட்ட அறிக்கை: தேனி மாவட்ட பொறுப்பாளராக கம்பம் வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார். தேனி மாவட்டக் கழக செயலாளராக இயங்கி வந்த எஸ்.சந்திரன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.

கடலூர் தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த மாவட்டக் கவுன்சிலர் காட்டு மன்னார்கோவில்  எம்.எஸ்.கந்தசாமி அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>