சரக்கு ரயிலில் நாமக்கல் வந்த 3,900 டன் மக்காச்சோளம்-கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைப்பு

நாமக்கல் : மத்திய பிரதேசத்தில் இருந்து, நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் 3,900 டன் மக்காச்சோளம் வந்தது.இதை லாரிகள் மூலம் கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கோழிப்பண்ணைகள் உள்ளன.இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவனம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மக்காசோளம் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

அதன்படி, மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து இரண்டு சரக்கு ரயில்களில் மொத்தம் 3900 டன் 96 வேகன்கள் மூலம் நேற்று நாமக்கல் வந்தது.இங்கிருந்து 125 சரக்கு லாரிகளில் மக்காசோள மூட்டைகளை ஏற்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கோழிப்பண்ணைகளுக்கு தொழிலாளர்கள் அனுப்பி வைத்தனர்.இதற்காக காலையிலேயே அதிக தொழிலாளர்கள் ரயில் நிலையத்தில் திரண்டனர்.

Related Stories:

>