×

மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரியின் தம்பி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை வயலில் கிடந்த சடலத்தை மீட்டு விசாரணை

லக்னோ:மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி லவ் அகர்வாலின் தம்பி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வயலில் கிடந்த சடலத்தை மீட்டு உத்தரபிரதேச போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் அடுத்த பில்கானி என்ற பகுதியில் உள்ள தொழிற்சாலை அருகே சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒரு நபரின் சடலம் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் எஸ்பி தேஹத் கூறுகையில், ‘மர்மமான முறையில் இறந்து கிடந்தவர், மத்திய அரசின் சுகாதாரத் துறையில் இணை செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி லவ் அகர்வாலின் தம்பி அங்கூர் அகர்வால். கோட்வாலி சதர் பஜார் கிரீன் பூங்காவில் வசிக்கும் அங்கூர் அகர்வாலுக்கு அம்பாலா சாலையில் மெட்டல் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில், பேட்டரியில் செருகப்படும் செல்கள் தயாரிக்கப்படுகின்றன. சம்பவ நாளான நேற்று ஐஏஎஸ் அதிகாரி லவ் அகர்வால் வீட்டில் இருந்து கிளம்பிய பின்னர், அவரது தம்பி அங்கூர் அகர்வாலை காணவில்லை. இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.  காலை 11 மணியளவில் அங்கூர் அகர்வால் தனது காரில் ஊழியர் ஒருவருடன்  தொழிற்சாலையில் இருந்து கிளம்பியுள்ளார். பின்னர், காரை ஊழியரிடம் கொடுத்து  அனுப்பிவிட்டு, சிறிது நேரம் கழித்து வருவதாகவும் கூறி உள்ளார். ஆனால், அவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அவரது செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.

காவல்துறையினர் மொபைல் எண்ணில் பேசிய டவர் குறித்து ஆய்வு நடத்தியதில் கடைசியாக பில்கானியில் சிக்னல் கிடைத்தது. ஆனால் காவல்துறையினரால் சம்பவ இடத்தினை அடைய தாமதமானது. மாலையில், அங்கூர் அகர்வாலின் சடலம் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வயலில் கிடந்தது. இறந்த அங்கூர் அகர்வால் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியின் மூலம் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அதனால் அங்கூர் அகர்வாலின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கூரின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.சர்சாவா போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்’ என்றார்.

Tags : Joint Secretary ,IAS officer ,Federal Department of Health ,suicide field , Suicide
× RELATED திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் பயணிகள் குற்றச்சாட்டு