×

மஹிந்திரா குழுமம் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி : சொந்த செலவில் ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனங்கள்

புதுடெல்லி : பிரபல தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக சொந்த செலவில் ஏற்பாடுகளை செய்து வருகின்றன. அதற்காக மருந்து நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் நாடு முழுவதும் தொடங்கியது. முன்களப் பணியாளர்களுக்கு தற்போது தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், ெபாதுமக்களுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள பிரபல தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக சொந்த செலவில் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளன. குறிப்பாக எஃகு உற்பத்தியாளரான ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட், மஹிந்திரா குழுமம் மற்றும் ஐடிசி லிமிடெட் போன்ற முக்கிய தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளன.

முன்னுரிமை அடிப்படையிலான மக்களுக்கு தடுப்பூசி போட்ட பின்னர், அடுத்த கட்டமாக போடப்படும் தடுப்பூசியை தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு போட சம்பந்தப்பட்ட தடுப்பூசி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. இதுகுறித்து கார்ப்பரேட் நிறுவன மனிதவள மேம்பாட்டு தலைவரான அபிநவ் முகர்ஜி கூறுகையில், ‘ஐ.டி.சி லிமிடெட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தடுப்பூசி போட விரும்புகிறது. தடுப்பூசி உற்பத்தியாளர்களை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. வணிக ரீதியாக தடுப்பூசி சந்தைக்கு வரும்ேபாது, ஊழியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட ஊரடங்குக்கு பின்னர், தொழிற்சாலைகள் மெதுவாக தனது இயக்கத்தை தொடங்கி உள்ளன. இதற்கிடைேய ஏராளமான தொழிலாளர்கள் குடிபெயர்ந்து தங்கள் கிராமங்களுக்கு திரும்பிச் சென்றனர். அவர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றார்.

ஜே.எஸ்.பி.எல் தலைமை மனிதவள அலுவலர் பங்கஜ் லோகன் கூறுகையில், ‘ஊழியர்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளதால், உற்பத்தியாளர்களுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட்டப்பின்னர், எங்கள் நிறுவனம் தடுப்பூசிகளை வாங்கும்’ என்றார். இதுகுறித்து மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறுகையில், ‘எங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட உள்ளோம். மத்திய அரசு அறிவித்துள்ள முன்னுரிமை மற்றும் நடைமுறை விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்’ என்றார்.

சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ​​உலகின் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

Tags : Mahindra Group ,companies , Mahindra Group, Vaccine, Private Companies
× RELATED அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி...