தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது. காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும் என கூறியுள்ளது.

Related Stories:

>