கொரோனா காலத்தில் 4 மொழிகளை பேச, எழுத கற்றுக்கொண்ட மாணவி

பொன்னமராவதி,:புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நகரப்பட்டியை  சேர்ந்தவர் சேதுராமன்-மகேஸ்வரி. இவர்களுக்கு நான்கு மகள்கள்  உள்ளனர். சேதுராமன் தற்போது வெளிநாட்டில் உள்ளார். இவரது  இரண்டாவது மகள் சுபபாரதி அதே பகுதியில் உள்ள அரசு உதவிபெறும்  பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஓவியம் வரைவதில்  ஆர்வமாக உள்ள சுபபாரதி பல்வேறு ஓவியப் போட்டிகளில் கலந்து  கொண்டு பரிசு பெற்றுள்ளார்.

மாணவி சுபபாரதி தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு எழுதவும் படிக்கவும்  தெரிந்திருந்த நிலையில், கொரோனா காலத்தில் தாயார் உதவியுடன்  ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளை  குறைந்த நாட்களில் எழுதவும் படிக்கவும் பேசவும் கற்று தற்போது ஆறு  மொழிகளையும் சரளமாக பேசி பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார்.நான்கு மொழிகளை பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்ட  மாணவி, பெயிண்டிங் டிராயிங், ரிவர்ஸ் ட்ராயிங் என கலக்கி வருகிறார்.

Related Stories:

>