×

2-வது நாளாக ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.37,152-க்கு விற்பனை

சென்னை: தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

அண்மை காலமாக தங்கம் விலை தாறுமாறாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.ஜனவரி 9ம் தேதி முதல் தங்கம் விலை மெல்ல மெல்ல இறங்கி வந்த நிலையில், ஜனவரி 13ம் தேதி முதல் முரட்டுத்தனமாக விலை குறைந்தது. இது தங்கம் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.12 உயர்ந்து ரூ.4,644-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.71.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.70,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : On the 2nd day, on the upside, the price of gold
× RELATED மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே...