×

கொரோனா வைரசுக்கு எதிரான 100% திறன் கொண்ட இரண்டாவது தடுப்பூசியை கண்டுபிடித்ததாக ரஷியா அறிவிப்பு : உலக நாடுகள் ஆச்சரியம்

மாஸ்கோ : கொரோனா வைரசுக்கு எதிரான 100% திறன் கொண்ட இரண்டாவது தடுப்பூசியை கண்டுபிடித்திருப்பதாக ரஷியா அறிவித்திருப்பது உலக நாடுகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.91.4% செயல் திறன் கொண்ட ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை ரஷியா உருவாக்கி தற்போது தனது நாட்டு மக்களுக்கு உபயோகித்து வருகிறது. அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி 90% செயல் திறன் கொண்டதாகவும் இங்கிலாந்தின் கோவிஷீல்டு தடுப்பூசி 62%செயல் திறன் கொண்டதாகவும் ஆய்வக பரிசோதையில் கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால் ரஷ்யாவின் வெக்டர் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள 2வது தடுப்பூசி 100% செயல்திறன் கொண்டதாக ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டு பயனாளர் சுகாதார கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. EpiVacCorona என்று பெயரிடப்பட்டுள்ளஇந்த தடுப்பூசியை ரஷிய அரசு கடந்த நவம்பர் மாதம் பரிசோதிக்க தொடங்கியது.

இதனை பிப்ரவரியில் உற்பத்தி செய்து விரைவில் தனது நாட்டு மக்களுக்கு விநோயோகிக்க இருப்பதாக ரஷியாவின் துணை பிரதமர் யூரி ட்ருட்னெவ் கூறியிருக்கிறார். கொரோனாவை தடுக்க மிகவும் துரிதகதியில் தடுப்பூசி தயாரித்து விநியோகித்த ரஷியாவுக்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது 100% செயல் திறன் கொண்ட தடுப்பூசியை தாங்கள் உருவாக்கி இருப்பதாக கூறியிருப்பது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  



Tags : Russia ,world , Vaccine
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...