மாலத்தீவு, நேபாளம் உள்பட 6 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குகிறது இந்தியா: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: மாலத்தீவு, நேபாளம் உள்பட 6 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்தியா இன்று வழங்குகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்டை நாடுகளான மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவி அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், உள்நாடு, வெளிநாடு தேவையை பொறுத்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பூட்டானுக்கு 1.5 லட்சம் கொரோனா தடுப்பூசி கொண்டு செல்லும் விமானம் தாமதமானது. மும்பையில் இரந்து பூட்டானில் உள்ள திம்புவிற்கு 1.5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டது.

Related Stories:

>