புருலியா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. சமீபத்தில் முதல்வர் மம்தாவுக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி, 9 எம்எல்ஏ.க்கள், ஒரு எம்பி.யை தொடர்ந்து, மேலும் சில திரிணாமுல் தலைவர்கள் பாஜ.வில் இணைந்து வருகின்றனர்.