நேதாஜி பிறந்தநாள் பராக்கிரம தினம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி, முதலாமாண்டு  பராக்கிரம தினமாக கடைபிடிக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். நேதாஜியின் 125வது  பிறந்தநாள் நினைவாக கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலக வளாகத்தில் கண்காட்சி நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் 400 மீட்டர் நீளமுள்ள கேன்வாஸ் துணியில் அவரது வாழ்க்கை வரலாற்றை ஓவியமாக தீட்ட உள்ளனர். இந்த ஆண்டு முழுவதும் நேதாஜியின் 125வது பிறந்த நாள் நிகழ்ச்சிகளை நடத்த பிரதமர் மோடி தலைமையில் 85  உறுப்பினர்கள் கொண்ட உயர் மட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

Related Stories:

>