ஜீரோ பாய்ண்ட் சிக்னல் அமைப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில்  தெரு பகுதியில் விபத்துகளை தவிர்க்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில் கன்டெய்னர் லாரி மற்றும் வாகனங்களின்  வேகத்தை குறைக்க நேற்று முன்தினம் இரவு ஜீரோ பாய்ண்ட் சிக்னல் அமைக்கப்பட்டது. இந்த சிக்னல் செயல்பாட்டை போக்குவரத்து உதவி கமிஷனர் ராஜகோபால் துவக்கி வைத்தார். இதன் பின்னர், சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மன், ராமதுரை, கோதண்டம் பெருமாள், ஸ்ரீகணபதி சுப்பையா மற்றும் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.     

Related Stories:

>