ரயில்வே தொழிற்சங்க கலந்தாய்வு கூட்டம்

பெரம்பூர்: பெரம்பூர் ஒற்றுமை நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை ரயில்வே தொழிற்சங்கத்தினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்ஆர்இஎஸ் தலைவரும், தேசிய சம்மேளனமான என்எப்ஐஆர் பொது செயலாளருமான ராகவைய்யாஜி தலைமை தாங்கினார். இதில் ரயில்வே கட்டண உயர்வின் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் 151 பயணிகள் மற்றும் சரக்கு ரயிலை தனியாருக்கு தாரைவார்ப்பதை உடனடியாக கைவிட வேண்டும். ரயில் நிலையங்களை விற்பதை கைவிட வேண்டும். அரசு பொதுத்துறை உள்ளிட்ட தொழிற்சாலைகள் பணிகளை கார்ப்பரேஷன்களாக மாற்றுவதை கைவிட வேண்டும். கொரோனா நோய்தொற்று காலத்தில் பேரிடரில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>